புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செயற்கை நுண்ணறிவு அபிவிருத்தி தொடர்பில் இலங்கை முயற்சி | ரணில் சேர் நிக்கிளேக் கலந்துரையாடல்

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்தி தொடர்பில் இலங்கை முயற்சி | ரணில் சேர் நிக்கிளேக் கலந்துரையாடல்

1 minutes read

நேற்றைய தினம் (19.09.2023) மற்றும் சேர் நிகிலேக் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் சந்திப்பு நடைபெற்றது . இந்த சந்திப்பில் AI  (செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பம் தொடர்பில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கை சார் கலந்துரையாடல் நடை பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் Sir (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்றக் குழு மீளாய்வின் போதும் இந்த சட்டமூலம் தொடர்பில் மேலதிக திருத்தங்களை மேற்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப துறை மேம்பாட்டிற்கான இலங்கையின் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரிவாக விளக்கமளித்தார்.

செயற்கை நுண்ணறிவு துறையில் இலங்கையும் மெட்டா நிறுவனமும் சாதகமான பங்குதாரர்களாக செயற்படுவது தொடர்பில் ஆராயவும், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் அபிவிருத்திக்காக மெட்டா நிறுவனத்துடன்  ஒத்துழைப்பு  வேலைத்திட்டத்தை  உருவாக்கவும்  இங்கு பரிந்துரைக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தைத் தணிப்பது தொடர்பில் தரவுகளை அடிப்படையாக கொண்ட வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக  நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு செயற்கை நுண்ணறிவை  பயன்படுத்தும்  அதேவேளை கல்விதுறை தொடர்பில் விசேட  அவதானம்  செலுத்தி இந்நாட்டு செயற்கை நுண்ணறிவு துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட இரு விடயங்கள் தொடர்பில் தான் அவதானம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி  மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More