செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வசூலில் சாதனை படைத்த லியோ!

வசூலில் சாதனை படைத்த லியோ!

0 minutes read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தற்போது உலகளாவிய ரீதியில் 520 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துதுள்ளது.

லியோ திரைப்படம் கடந்த 19ம் திகதி திரைக்கு வந்தது. இது வெளியாகி 12  நாட்களில் குறித்த தொகையை வசூலித்துள்ளது.

விஜயின் லியோ திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய்த், பிரியா ஆனந்த், ஜனனி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

மக்கள் மத்தியில் பாரிய அளவிலான எதிர்பார்ப்புடன் வெளிவந்த நிலையிலும், மறுபக்கம் எதிரான விமர்சனங்களுக்கு உள்ளாகியும் நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் ‘லியோ’ படக்குழுவினர் வெற்றி விழாவை நேரு விளையாட்டு அரங்கில் நவம்பர் 1ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.