செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மீண்டும் பங்களாதேஷ் பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

மீண்டும் பங்களாதேஷ் பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

1 minutes read

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் 436 சுயேச்சை வேட்பாளர் உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

இந்த சூழலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது.

இந்த தேர்தலில் பிரதமரும், அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார். அவர் கோபால்கஞ்ச்-3 தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஹசீனா பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 965. அவரை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஷ் சுப்ரீம் கட்சி வேட்பாளர் நிஷாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த முடிவுகளை கோபால்கஞ்ச் துணை ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான காசிமஹ்புபுல் ஆலம் அறிவித்தார். ஷேக் ஹசீனா இந்த தொகுதியில் இருந்து 8ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.