உவமைகள் இன்னும் இலக்கியங்களை மெருகூட்டுகின்றன, அழகு படுத்துகின்றன. ஒன்றைப் போல ஒன்று என்று சொல்லும் போது இப்படி எல்லாம் எண்ணத் தோன்றியிருக்கின்றதா? என்ற பிரமிப்பு எங்களுக்குள் வரும் என்பது நிச்சயம்.
சங்க இலக்கியங்கள் அனைத்திலுமேமே உள்ளம் நிறையும் உவமைகள் கொட்டிக்கிடக்கின்றன. எம் மனதில் பதிய வைக்கவே இந்த உவமைகள் கையாளப்படுகின்றன. இந்த உவமைகளால் உலாவரும் மாந்தர்கள் அப்படியே எம் மனதில் நின்று விடுகின்றனர்.
இன்று எம் கைகளில் தவழும் அரிய பொக்கிசங்களான சங்க இலக்கியங்களைப் படைத்த சில புலவர்களின் இயற்பெயர்கள் தெரிய முடிவில்லை என்பது துரதிர்ஷ்டமே. ஆகவே பாடலில் அவர்கள் கையாண்ட சிறப்பான அந்த உவமைகளை வைத்தே நாங்கள் அவர்களை அழைக்கின்றோம்.
குறுந்தொகையில் எம்மைக் கொள்ளை கொள்ளும் மற்றும் காடசிக்குள் அப்படியே ஈர்க்கும் உவமைகளை இந்தப் பதிவில் நாம் உற்று நோக்கலாம்.
குறுந்தொகையில் எல்லாப் பாடல்களுமே இனிய சுவையுடன் அமைந்துள்ளமை தனிச்சிறப்பு. இதனை “நல்ல குறுந்தொகை” என்ற அடைமொழி வைத்தே அழைக்கின்றோம்.
குறுந்தொகை-40
” யாயும் ஞாயும் யாராகிரோ
எந்தையும் நுந்தையும் எம்ம்முறைக்க கேளீர்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே”
என்று அந்தப் பாடல் வருகின்றது.
அதாவது என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானார்கள்? எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்து கொண்டோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழை போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே! என தலைவன் கூறுவதாக அமைந்துள்ளது. செம்மண் நிலத்தில் மழை பெய்தால் இரண்டையும் பிரிக்க முடியாது அது போல போல அவர்களைப் பிரிக்க முடியாது என்பது கருத்து.
இந்தப் பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் அறிய முடியாத காரணத்தினால், அவர் உபயோகித்த உவமையை வைத்து அவரைச் சிறப்பாக “செம்புலப் பெயல் நீரார்” என்று அழைக்கின்றோம்.
குறுந்தொகை -35
“குப்பைக் கோழித் தனிப் போர் போல”
என்று ஒரு பாடல் வருகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஊடல் முடிவுக்கு வர வேண்டுமாயின் அவர்களில் ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். பிறர் தலையிட்டுத் தீர்க்க முடியாது. அதைக் குறிப்பிடவே குப்பையில் இரண்டு கோழிகள் சண்டையிட்டால் விலக்குபவர் யார்? அந்தக் கோழிகள் தான் சண்டையை நிறுத்த வேண்டும். அதுபோல ஊடலிலும் தலைவனும் தலைவியும் தான் விட்டுக் கொடுத்து ஊடலைக் கைவிட வேண்டும் என்கிறார் புலவர். இவரின் பெயர் அறியாத காரணத்தினால் “குப்பைக் கோழியார்” என்று அழைக்கப்படுகின்றார்.
குறுந்தொகை -41
“மக்கள் போகிய அணிலாடு முன்றில் புலப்பில் போல”
என அந்தப் பாடல் வருகின்றது. தலைவியின் மனநிலையைத் தோழி கூறுவதாக அமைந்துள்ளது. ஒரு வீட்டில் உள்ள மக்கள் எல்லோரும் அந்த வீட்டை விட்டுப் போன பின்னர் முற்றம் வெறிச்சோடிக் கிடக்கும். அந்த முற்றத்தில் அணில் ஓடி விளையாடும். அந்த முற்றத்தைப் போல தனிமை கொண்டவளாகத் தலைவி இருக்கின்றாள் என்று பொருள் படுகிறது. தனது உவமை மூலம் புலவர் அந்தக் காட்சியை எம் கண் முன்னே கொண்டு வருகிறார். அதனாலயே அவர் “அணிலாடும் முன்றிலார்” என்று அறியப்படுகின்றார்.
குறுந்தொகை -131
“ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓரேர் உழவன் போல”
என் வரும் பாடலில்,
எப்பொழுது மழை பெய்யும்? எப்பொழுது நிலத்தில் ஈரம் வரும்? என்று காத்திருப்பான் உழவன். ஈரம் வந்தவுடன் ஈரம் வீணாகாமல் போகாதிருக்க நிலத்தை உழுவதற்கு அவசரமாக உழவன் செல்வது போல தலைவியைக் காண தலைவனின் நெஞ்சம் விரைந்து செல்கிறது என்று அந்தப் புலவர் பாடியுள்ளார். ஆதலால் “ஓரேர் உழவனார்” என்ற பெயரைப் பெறுகின்றார்.
இவ்வாறு குறுந்தொகையில் மட்டுமே, இயற்பெயர் அறியப் படாத 18 புலவர்கள் தமது உவமைகளைப் பெயராகக் கொண்டுள்ளனர்.
ஆக எம்மைக் கொள்ளை கொள்ளும், நமது ஆசையைத் தூண்டிவிடும், இன்னும் தேட வைக்கும் பல உவமைகளை சங்க இலக்கியங்கள் தோறும் நாம் காணலாம்.
இவ்வாறு பல உவமைகளை, பலப்பல பழமொழிகளை தன்னகத்தே கொண்டவர்கள் நாங்கள். வீட்டுமொழியாக இருக்கும் நம் தமிழ் மொழியில் பழமொழிகளை, உவமைகளைப் பயன்படுத்துவோம்.
இவற்றைப் புழக்கத்தில் வைத்திருந்து அடுத்த சந்ததிக்கும் எமது முது சொற்களைக் கடத்துவோம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்