செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில்!

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில்!

1 minutes read

பாகிஸ்தானில் நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இம்ரான் கான் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால், அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கைபர் பக்துன்கா மாகாணத்தில் உள்ள பிகே-76 தொகுதியில் சமியுலலா கான் 18,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளர் பஜல ஹக்கீம் கான் பிகே-6 தொகுதியில் 25,330 வாக்குகள் பெற்று பெற்று பெற்றுள்ளார். அதேபோல் அலிகான் பிகே-4 தொகுதியில் 30,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நவாஸ் ஷெரீப் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.