12
சிவனே!
நின் சிவராத்திரி தின செய்தி அற்புதம்
வெடுக்கு நாறி மலையில்
இலங்கையின் சன நாயகம்
இன்று மீண்டும் நாறும்
சப்பாத்துக்கால்களின் சன்னதம்
நன்மைக்கே!
காவியும் காக்கியும்
நால்லாக நாறட்டும்
தமிழனுக்கு ஏன் பொலிஸ் அதிகாரம் ?
கேள்விக்கு உலகறிய
கேட்டவனே தந்த பதில்
சிவனருளே!
சவமாய் கிடக்காமல்
ஆட்டத்தைத் தொடங்கிட
சிவன் தந்த வரத்தின்
பொருளுணர்து எழுவோம்!
– சண்முக பாரதி