செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வரவு – செலவுத் திட்டம்: எரிபொருள் வரி குறைப்பின்மை மற்றும் போதாத நிவாரணங்கள் குறித்து விசனம்

வரவு – செலவுத் திட்டம்: எரிபொருள் வரி குறைப்பின்மை மற்றும் போதாத நிவாரணங்கள் குறித்து விசனம்

1 minutes read

சான்சலர் ஜோன் ஹீலி, தனது முதலாவது வரவு- செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், அதில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் தற்போதைய வாழ்க்கைச் செலவின நெருக்கடியைச் சமாளிக்க போதுமானதாக இல்லை என நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வங்கிகள் மீதான வரி அதிகரிப்பு மற்றும் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு நூறு பவுண்ட்ஸ் எரிசக்தி நிவாரணக் கொடுப்பனவு உள்ளிட்ட பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை அன்றாட நிதிச் சுமைகளுக்குப் போதுமான பலனைத் தரவில்லை என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி – வாழ்க்கைச் செலவு நெருக்கடி: இங்கிலாந்தில் 2 கோடி குடும்பங்களுக்கு 100 பவுண்ட்ஸ் நிவாரணக் கொடுப்பனவு

குறிப்பாக, மோட்டார் வாகனங்களுக்கான எரிபொருள் தீர்வை வரி குறைக்கப்படாமை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. வருடாந்தம் 30,000 பவுண்ட்ஸ் வருமானம் பெறும் டேவ் ஹெர்பர்ட் என்ற தொழில்முறை சாரதி கருத்து வெளியிடுகையில், இந்த ஆண்டில் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாகவும், மாதாந்தம் எரிபொருளுக்காக 350 பவுண்ட்ஸ் வரை செலவிட நேரிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் தீர்வை வரி லீற்றர் ஒன்றுக்கு 57.95 பென்ஸாக தொடர்ந்தும் முடக்கப்பட்டிருந்தாலும், வரியில் நேரடி வெட்டு எதுவும் மேற்கொள்ளப்படாதமை தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் காட்டும் தாமதம் தொடர்பிலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில், இளைஞர் வேலையின்மை தொடர்பான மீளாய்வு அறிக்கையை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைத்துள்ளமை கவலையளிப்பதாக சுவிண்டனைச் சேர்ந்த 19 வயதுடைய எமிலி நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்தி, உடனடியாக நிதியுதவிகளை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் அறிவித்துள்ள வாழ்க்கைச் செலவு நிவாரணங்கள் மிகக் குறைவானவை என குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் குற்றம் சாட்டியுள்ளனர். கேட்ஸ்ஹெட்டைச் சேர்ந்த றொபேர்ட் போர்ட்லொக் என்பவர் தெரிவிக்கையில், ஆண்டிற்கு நூறு பவுண்ட்ஸ் எரிசக்தி மானியம் என்பது மாதத்துக்கு 10 பவுண்ட்ஸுக்கும் குறைவானதே எனவும், உணவுப் பொருட்கள் மீதான வரி விலக்குகள் மாதத்திற்கு வெறும் 1.75 பவுண்ட்ஸ்களை மட்டுமே மிச்சப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

வீட்டு வாடகை மற்றும் வாகனச் செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறான சலுகைகள் எந்த வகையிலும் நடைமுறைச் சுமையைக் குறைக்க உதவாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.