செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே புதிய ஒடுக்குமுறைச் சட்டங்கள் | எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே புதிய ஒடுக்குமுறைச் சட்டங்கள் | எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

1 minutes read

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தனது இயலாமையையும் திறமையின்மையையும் மறைப்பதற்காகவே புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய நகர்வுகள் தொடர்பில் வியாழக்கிழமை (29) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியல் வரலாற்றில் இல்லாதவாறு வலுவான ஆட்சியை அமைப்பதாகக் கூறியும், புதிய அரசியலமைப்பு ஊடாக மக்களின் அடிப்படை, பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்துமே இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடமேறியது.

எனினும், தற்போது மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் பரிதவித்து வருகின்றது.

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தல், வறுமையை ஒழித்தல், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்களை வலுப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசு முற்படுகிறது.

அரச பயங்கரவாதத்தையும் அச்சுறுத்தலையும் பரப்பி, நழுவிச் செல்லும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே ‘அரசுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டம்’ போன்ற கடுமையான சட்டங்களை சர்வாதிகாரப் போக்குடன் கொண்டுவரப் பார்க்கிறது.

வன்முறை மற்றும் பழிவாங்கல் அரசியலை முதன்மைப்படுத்தி ஜனநாயகத்தை அடிவேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, ஒருகட்சி ஆட்சியை நோக்கி நகர்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது.

தேசிய பாதுகாப்பின் பெயரால் நிறைவேற்று அதிகாரங்களை வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் செல்ல முடியாத தம்மைப் போன்ற ஆட்சியாளர்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இந்த கடுமையான விதிகள் உருவாக்கப்படுகின்றன.

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காகப் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருந்தது.

ஆனால், அதைவிடக் கடுமையான சட்டங்களை அரசாங்கம் கொண்டுவர முயல்வதன் காரணமாக, இலங்கைக்குக் கிடைக்கும் ஏற்றுமதிக்கான ஜி.எஜ்.பி.பிளஸ் வரிச் சலுகையை நாடு முழுமையாக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கியது பெலவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தைப் பலப்படுத்துவதற்கு அல்ல, மாறாக நாட்டின் இறைமையையும் மக்களின் பரமாதிப்பத்தியத்தையும் பாதுகாப்பதற்கேயாகும்.

எனவே, ஜனநாயகத்தைப் பறிக்கும் சட்டங்களைக் கைவிட்டு, புதிய அடிப்படை உரிமைகள் அத்தியாயம் ஊடாக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.