செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ‘மக்கள் படைப்பாளி’ சீனு ராமசாமி வெளியிட்ட ‘கஜானா’ பட டீசர்

‘மக்கள் படைப்பாளி’ சீனு ராமசாமி வெளியிட்ட ‘கஜானா’ பட டீசர்

1 minutes read

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘கஜானா’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரை தமிழ் திரையுடகத்தின் முன்னணி தயாரிப்பாளர்களான ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கலைப்புலி எஸ் தாணு, தேனாண்டாள் முரளி ராமசாமி மற்றும் ‘மக்கள் படைப்பாளி’ சீனு ராமசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இயக்குநர் பிரபாதிஷ் சாம்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கஜானா’ எனும் திரைப்படத்தில் யோகி பாபு, வேதிகா, இனிக்கோ பிரபாகரன், சாந்தினி, ஹரிஷ் பெராடி, பிரதாப் போத்தன், மொட்டை ராஜேந்திரன், சென்ட்ராயன், விஜி, வேலு பிரபாகரன், ராஜேஷ், தேவா, பூஜா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோபி துரைசாமி மற்றும் ஜே பி வினோத் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார்.

அடர்ந்த வன பின்னணியில் ஹாரர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபாதிஷ் சாம்ஸ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் அடர்ந்த வனத்தில் கதாபாத்திரங்கள் பயணிப்பதும், ஹாரர் மற்றும் அமானுஷ்ய விடயங்கள் இடம்பெற்றிருப்பதும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இதனால் இந்த திரைப்படத்தை  படமாளிகையில் காண வேண்டும் என்ற உந்துதலையும் உண்டாக்கி இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.