செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார்ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார்

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார்ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார்

1 minutes read

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுக்கு பல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர் தற்போது ‘புரூஸ்லீ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்கள் வரிசையாக ஹிட்டானதால் கோலிவுட்டின் ஹாட்ரிக் இயக்குனராக ராஜேஷ் வலம்வந்தார்.

இப்படங்களுக்குப் பிறகு இயக்கிய அழகுராஜா மற்றும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படங்கள் தோல்வியைத் தழுவி ராஜேஷின் ஹாட்ரிக் இமேஜை காலி செய்தது. இதனால் அடுத்து வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தயாராகியிருக்கிறார். இப்படமும் ராஜேஷின் வழக்கமான காமெடி படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தின் கதைக்கு ஜி.வி.பிரகாஷ் பொருத்தமாக இருப்பதாகவும், அதனால் அவரை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.