செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ பட அப்டேட்

நடிகர் நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ பட அப்டேட்

1 minutes read

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமான ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே ‘எனும் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்ரம் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூரியா’ஸ் சாட்டர்டே ‘ எனும் திரைப்படத்தில் நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி. ஜி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பு ஏற்ற வகையில் கதையின் நாயகனான நானியின் வித்தியாசமான தோற்றம் போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நானி மகிழ்ச்சி ததும்பும் இளம் நபராக வலம் வருகிறார். இந்த போஸ்டரை அவருடைய  ரசிகைகள் பாரிய அளவில் வரவேற்று இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More