செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயிர்துறந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொது நினைவேந்தல் யாழில் நாளை!

உயிர்துறந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொது நினைவேந்தல் யாழில் நாளை!

0 minutes read

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் உயிர் துறந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது, தமிழின வறலாற்றில் என்றுமே மறக்கமுடியாத ‘வெலிக்கடை சிறைப் படுகொலை’ இடம்பெற்ற தினமான நாளை வியாழக்கிழமை (25) மாலை 3.05 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ‘தந்தை செல்வா கலையரங்கில்’ ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தின் பெயரில் இலங்கை சிறைகளுக்குள் இரையாக்கப்பட்ட எமது உறவுகளை உணர்வுபூர்வமாக நினைவுகூரும் இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவ மற்றும் ஆசிரியர் சமூகத்தினர், ஊடகத்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.