செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிரசாந்துக்கு கை கொடுக்குமா 50வது படத்தின் வெற்றி சென்டிமென்ட்

பிரசாந்துக்கு கை கொடுக்குமா 50வது படத்தின் வெற்றி சென்டிமென்ட்

1 minutes read

பிரசாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் அவருடைய ஐம்பதாவது திரைப்படமான ‘அந்தகன்’ ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் திகதி வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ எனும் திரைப்படத்தில் பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு, வனிதா விஜயகுமார், கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ எனும் திரைப்படத்தின் மறு உருவாக்கமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதில் பிரசாந்த் பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளியாகவும், பியானோ எனும் இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞனாகவும்  நடித்திருக்கிறார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மகாராஜா’ வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. தனுஷின் ஐம்பதாவது படமான ‘ராயன்’ வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஐம்பதாவது படம் வெற்றி பெற்றதால் அந்த சென்டிமென்ட் பிரசாந்திற்கும் கைகொடுக்கும் என்றும், பிரசாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ஐம்பதாவது படமான ‘அந்தகன்’ திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் என்றும் திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.