செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர பயணித்த கார் விபத்தில் சிக்கியது

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர பயணித்த கார் விபத்தில் சிக்கியது

0 minutes read

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர பயணித்த கார் நேற்று (31) புதன்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர வாதுவையிலிருந்து கொழும்பு பொலிஸ் தலைமையகத்தை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.