பங்களாதேசில் இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ள இராணுவதளபதி வகெர் உஸ் ஜமான் இடைக்கால அரசாங்கம் குறித்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை சந்திக்கப்போகின்றேன் இன்றைய நாளிற்குள் தீர்வு ஒன்று சாத்தியப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நான் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் பங்களாதேஸ் மக்களிற்கு நீதி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.