செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மனிதர்களின் தலைமுடியின் பின்னணியில் உள்ள வணிக அரசியலை உரத்துப் பேசும் ‘ப்ளாக் கோல்ட்’

மனிதர்களின் தலைமுடியின் பின்னணியில் உள்ள வணிக அரசியலை உரத்துப் பேசும் ‘ப்ளாக் கோல்ட்’

1 minutes read

நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிளாக் கோல்ட்’ திரைப்படம் எம்முடைய தலைமுடியை வைத்து நடைபெறும் மோசடி, முறைகேடுகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக தயாராகியிருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் தீரன் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்ட்’ திரைப்படத்தில் வெற்றி, பிரியாலயா, அருள் டி சங்கர், லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், இயக்குனர் ஏ. வெங்கடேஷ், ராமர், சபிதா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் குமார் வீராச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார். எக்சன் த்ரில்லராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை எம்.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். மூர்த்தி தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வும் முன்னோட்ட வெளியீட்டு விழாவும் சென்னையில் பிரத்யேகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபற்றினர்.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் தீரன் அருண்குமார் பேசுகையில், ‘தீர்ப்புகள் விற்கப்படும் படத்திற்கு பிறகு ஐந்தாண்டு கழித்து ‘பிளாக் கோல்ட்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். இப்படத்திற்கான கதையை நாம் அன்றாடம் பயன்படுத்தும் தலைமுடி மற்றும் அதன் பின்னணியில் உள்ள வணிகம் சார்ந்த அரசியலை பரபரப்பான த்ரில்லர் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்திற்கு நடிகர் வெற்றி பொருத்தமாக இருந்ததால்… அவரை தெரிவு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.