தீபத்திருநாள் வாழ்த்துகள்!
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
இருள் அகன்று ஒளி பிறப்பதைப் போல, துயரங்களும் துயரத்தின் நிழல்களும் நீங்கி, ஒவ்வொருவரது வாழ்விலும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறையட்டும். அன்பும் மனிதநேயமும் சகோதரத்துவமும் உலகெங்கும் தழைத்தோங்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
குறிப்பாக, ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் ஒடுக்குமுறைகள், உரிமை மறுப்புகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நீண்டகாலத் துயரங்கள் அனைத்தும் நீங்கி, நீதியும் சமத்துவமும் சுதந்திரமும் நிலைபெறும் தேசமாகத் தமிழ் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கு மலர வேண்டும். எமது மக்களின் வாழ்வில் விடியலும் விடுதலையும் நிரந்தர அமைதியும் பிறக்கட்டும்.
ஒளி நிறைந்த வாழ்வும் உரிமை நிறைந்த எதிர்காலமும் அமையட்டும்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
– ஆசிரியர் பீடம்