Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் வடிவேலு – சுந்தர் சி கூட்டணி

மீண்டும் வடிவேலு – சுந்தர் சி கூட்டணி

1 minutes read

இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘கேங்கர்ஸ்’ எனும் புதிய படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைந்திருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வையை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘கேங்கர்ஸ்’ எனும் திரைப்படத்தில் சுந்தர் சி, வடிவேலு , கேத்ரின் தெரசா, மைம் கோபி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி, அருள்தாஸ், முனிஸ்காந்த், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஈ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார்.

நகைச்சுவை படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா லிமிடெட் சார்பில் ஏ சி எஸ் அருண்குமார் வழங்குகிறார்.

இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் வைகை புயல் வடிவேலுவின் வித்தியாசமான தோற்றமும் சுந்தர் சி யின் கர்ஜிக்கும் தோற்றமும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அத்துடன் இந்த கூட்டணியில் உருவாகும் ‘கேங்கர்ஸ்’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More