Wednesday, September 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம்!

வடக்கு மாகாண ஆளுநராக வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம்!

0 minutes read

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியில் இருந்து கடந்த 23ஆம் திகதி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்தே வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னைய ஆட்சியில் இடைநடுவே சில அரசியல் தலையீடுகள் காரணமாக பதவி விலகியிருந்தார். இதன் அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரப்பு முன்வந்தமையால் வேதநாயகன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஆளுநராகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More