செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் இசை ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் சத்யராஜின் ‘ஜீப்ரா’ பட பாடல்

இசை ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் சத்யராஜின் ‘ஜீப்ரா’ பட பாடல்

1 minutes read

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜீப்ரா’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் உந்தன் வானா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜீப்ரா’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், சத்ய தேவ், டாலி தனஞ்ஜெயா, பிரியா பவானி சங்கர், அம்ருதா ஐயங்கார், சுனில், ஜெனிபர் பிகானிடோ, சத்யா, சுரேஷ் சந்திர மேனன், கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.

நிதி மோசடி தொடர்பான கிரைம் திரில்லர் ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் & பத்மஜா ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். என். ரெட்டி – பாலசுந்தரம் – தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நான் உந்தன் வானா.. நீ வெள்ளி மீனா .. ‘ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் கு. கார்த்திக் எழுத, பின்னணி பாடகர் சந்தோஷ் வெங்கி மற்றும் பின்னணி பாடகி அயிரா உடுப்பி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாலி தனஞ்செயா மற்றும் அம்ருதா ஐயங்கார் ஆகியோர் திரையில் தோன்றி ரசிகர்களை கவர்கிறார்கள்.

இந்தப் பாடலின் மெட்டு… மெல்லிசையாகவும், காதல் உணர்வையும் கலந்திருப்பதால் இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More