செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். திகில் படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளின் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்றும், இப்படத்தின் டீசர் எதிர்வரும் 16-ஆம் திகதியன்று வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் என்பது இந்திய திரையுலகை எப்போதும் வியப்பிற்குள் ஆழ்த்தும் என்பதால் அவரது நடிப்பில் தயாராகி டிசம்பரில் வெளியாகும் ‘ தி ராஜா சாப்’  திரைப்படமும் வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.