செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘பொலிஸ் ஃபெமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘பொலிஸ் ஃபெமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

0 minutes read

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘சட்டமும் நீதியும் ‘என்ற இணைய தொடர் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பருத்திவீரன்’ சரவணன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ பொலிஸ் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை நடிகர்கள் சசிகுமார் – வெற்றி-  காளி வெங்கட் – சரவணன்-  இயக்குநர் பாண்டிராஜ் – ஒளிப்பதிவாளர் பி. ஜி. முத்தையா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பாலு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொலிஸ் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் ‘ பருத்தி வீரன் ‘ சரவணன், ‘காதல்’ சுகுமார், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயா கே. தாஸ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை  ஒன் த டேபிள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மலைச்சாமி ஏ எம் ராஜா தயாரிக்கிறார். படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.