ஐரோப்பிய ஒன்றியம் காலில் விழுந்தது போல் இந்தியாவும் விழுமென்று எதிர்பார்த்தார்.
அதாவது அமெரிக்க ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒனறியம் போல எல்லா நாடுகளும் zero வரி விதிக்க வேண்டுமென்பதுதான் டிரம்பின் எதிர்பார்ப்பு.
அதற்கு இந்தியா இணங்கவில்லை.
இறுதிச் சுற்றில் சீனாவிடம் வருவார். அந்தப் பெரிய party, அமெரிக்காவில் பெரிய முதலீடுகளை செய்வதால் ஒரு பாரிய இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோமெனச் சொல்வார் டிரம்ப். பாருங்கள்.
அதேவேளை, BRICS+ ஐ கூட்டச் சொல்லி பிரேசிலின் லூலா கேட்டுள்ளார்.
பிரிக்சிற்கு பொது நாணயம் தேவையில்லயென்ற இந்தியாவிற்கு, சில அழுத்தங்கள் அங்கு வரலாம்.
“அப்பவே சொன்னன் …கேட்டியே கிளி” என்கிற குரல்கள் அங்கு ஒலிக்கும்.
அதற்கு முன்பாக உக்ரெயின் போரில் சில உடன்பாடுகள் எட்டப்படும் வாய்ப்புகள் உண்டு.
அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழமை போல் முட்டுக்கட்டை போடும்.
உக்ரேனின் கனிம வளங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் பங்கிட்டால், தமக்கு ஏதுமில்லையா(😀)? என்பதுதான் ஐரோப்பிய நாட்டு தலைகளின் ஆதங்கம்.
தனது trade deficit பொருளாதாரத்தை மாற்றியமைக்கவே வர்த்தகப்போர், வரிப்போர் என்கிற ஆயுதங்களை கையிலெடுத்துள்ளார் அதிபர் டிரம்ப்.
பலவீனத்திலிருந்து உருவான இவ்வகையான பொருளாதார சண்டித்தனங்களை ,பல நாடுகள் புரிந்து கொள்ளும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ,தான் உருவாக்கிய உலக ஒழுங்கு, அதனோடு இணைந்த நிதி மற்றும் நீதி நிர்வாக கட்டமைப்பு என்பவற்றிற்கு எதிராக களமிறங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க establishment வந்துள்ளது.
சுயாதீனமாக இயங்கும் என்று சொல்லப்பட்ட Federal Reserve இன் தலைவரையே வெருட்டுகிறார் டிரம்ப்.
அடுத்ததாக Intel கார்ப்ரேட் கம்பனிக்கும் அச்சுறுத்தல் விடுக்கிறார்.
இவர் தனது உள்நாட்டு வெளிநாட்டு கட்டமைப்புகள் மீது அழுத்தங்களை கொடுப்பதன் தாற்பரியம் என்ன?.
தனது “வரி அழுத்தம்’ வேறு விளைவுகளை உருவாக்க முன், ரஷ்யா-சீனாவுடன் ஒரு இணக்கப்பாட்டினை டிரம்ப் ஏற்படுத்துவார் என்று தெரிகிறது.
ஆகவே சில வாரங்களில் உலக ஒழுங்கின் புதிய திசை தெரிந்துவிடும்
-இதயச்சந்திரன்
(7-8-2025)