செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் குப்பைத் தொட்டியில் சடலம் மீட்பு: 36 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு

இங்கிலாந்தில் குப்பைத் தொட்டியில் சடலம் மீட்பு: 36 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு

1 minutes read

இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் குப்பைத் தொட்டியொன்றில் சடலமொன்று பகுதியளவில் மறைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, நபரொருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிளைமவுத், கிராண்ட் பரேட் பகுதியைச் சேர்ந்த 36 வயதான முகமது அபொடகா என்பவரே, 52 வயதான அலி பர்சாய் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார் என்று டெவன் மற்றும் கோர்ன்வால் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரான முகமது அபொடகா திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கிராண்ட் பரேட் பகுதிக்கு அருகிலுள்ள சேவை ஒழுங்கையொன்றில் புதன்கிழமை காலை 06:40 மணியளவில் அலி பர்சாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எவ்வித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள துப்பறியும் பரிசோதகர் கிறிஸ் லித்கோ, எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தேகநபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்திருப்பின் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் உயிரிழந்த அலி பர்சாயின் நெருங்கிய உறவினர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.