செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வெயிலால் கருப்பான கைகளை வெள்ளையாக்கணுமா?

வெயிலால் கருப்பான கைகளை வெள்ளையாக்கணுமா?

1 minutes read

வெயிலில் அதிகமாக இருப்பதால் கைகளின் சருமம் கருமையாகிவிடுவது சாதாரணம். பலர் இதை நீக்க நிறைய க்ரீம்கள், லோஷன்கள் வாங்கிப் பயன்படுத்தினாலும் எதிர்பார்த்த பலனை தராமல் போகலாம்.

ஆனால், நம் சமையலறையிலேயே கைகளை வெண்மையாக்க உதவும் இயற்கை பொருட்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி தினமும் இரவில் கைகளை பராமரித்தால், கருமையைப் போக்கி மென்மையான வெண்மையான கைகளாக மாற்ற முடியும்.

இங்கே சில எளிய மற்றும் பயனுள்ள நைட் பேக்குகள்:

1. கடலை மாவு – மஞ்சள் பேக்

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2–3 சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

இதை கைகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

10–15 நிமிடம் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவவும்.

2. தேன் – எலுமிச்சை பேக்

2 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கைகளில் தடவவும்.

மென்மையாக மசாஜ் செய்து 5–10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.

3. தயிர் – தக்காளி பேக்

1 டேபிள் ஸ்பூன் தயிரில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து கலக்கவும்.

கைகளில் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்து 5–10 நிமிடம் ஊறவைத்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசரை தடவவும்.

4. உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கை துருவி சாறு பிழிந்து எடுக்கவும்.

அந்த சாற்றை கைகளில் தடவி 5–10 நிமிடம் ஊறவைத்து, பஞ்சுருண்டை கொண்டு துடைக்கவும்.

இதை தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5. வெள்ளரிக்காய் – ரோஸ் வாட்டர் பேக்

வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து காட்டனில் நனைத்து கைகளில் தடவவும்.

5–10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

6. சந்தனப்பொடி – ரோஸ் வாட்டர் பேக்

1 டேபிள் ஸ்பூன் சந்தனப்பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து கைகளில் தடவவும்.

10 நிமிடம் ஊறவைத்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசரை தடவவும்.

7. முல்தானி மெட்டி – கற்றாழை ஜெல் பேக்

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

கைகளில் தடவி 10–15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.

8. பப்பாளி – தக்காளி சாறு பேக்

2 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

கைகளில் தடவி 10–12 நிமிடம் ஊறவைத்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசரை தடவவும்.

இந்த இயற்கை முறைகளை தொடர்ந்து இரவில் பயன்படுத்தி வந்தால், கைகளில் உள்ள கருமை குறைந்து, மென்மையான வெண்மையான கைகளாக மாறும்.

⚠️ கவனிக்க: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தவொரு தகவலையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.