செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் வீழ்ச்சி

மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் வீழ்ச்சி

1 minutes read

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், குறிப்பாக மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்றே குறைவடைந்துள்ளது.

2026 மார்ச் 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை  மட்டும் மொத்தமாக 175,661 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி (277,327) மற்றும் பெப்ரவரி (279,328) மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. எனினும், மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கையில் சற்றே வீழ்ச்சி காணப்படுகிறது.

மார்ச் மாதத்தில் தினசரி சராசரி வருகை 6,057ஆகப் பதிவாகியுள்ளது. மார்ச் 14ஆம் திகதி அதிகபட்சமாக, ஒரே நாளில் 7,318 பயணிகள் வந்துள்ளனர்.

அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 45,650 பயணிகள் (26%) வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,030 பயணிகள், ரஷ்யாவிலிருந்து 15,579 பயணிகள், சீனாவிலிருந்து 13,449 பயணிகள், ஜெர்மனியிலிருந்து 12,603 பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 10,219 பயணிகள்,  பிரான்ஸிலிருந்து 8,015 பயணிகள், அமெரிக்காவிலிருந்து 5,150 பயணிகள், ஜப்பானிலிருந்து 4,338 பயணிகள்,  பங்களாதேஷிலிருந்து 4,192 பயணிகள் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து மொத்தமாக 39,436 பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மார்ச் 29 வரை மொத்தம் 732,316 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.