செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை Facebook Down | திடீரென முடங்கிய பேஸ்புக்… பயனர்கள் அவதி!

Facebook Down | திடீரென முடங்கிய பேஸ்புக்… பயனர்கள் அவதி!

1 minutes read

திடீரென ஃபேஸ்புக் சேவை, இந்தியா உட்பட உலகத்தின் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியுள்ளது. கணக்கு தானாகவே Logout ஆவது, பதிவுகள் ஏற்கப்படாமல் இருப்பது, Error காட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

உலகின் பல பகுதிகளிலும் ஃபேஸ்புக் சேவைகள் முடங்கியதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். மெட்டா நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. இந்த செயலிகளை இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுமார் 350 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென ஃபேஸ்புக் சேவை, இந்தியா உட்பட உலகத்தின் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியுள்ளது. கணக்கு தானாகவே Logout ஆவது, பதிவுகள் ஏற்கப்படாமல் இருப்பது, Error காட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த சில நிமிடங்களாக பாதிப்பு உணரப்பட்டுள்ளது. பல லட்ச பயனர்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனம் அதன் சேவை பக்கத்தில் பயனர்கள் பார்க்கும் வகையில் காரணத்தை தெரிவித்துள்ளது.

பேஸ்புக் சேவை பக்கத்தில், “தளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உங்கள் கணக்கு தற்போது தற்காலிகமாகக் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயவுசெய்து சில நிமிடங்கள் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்.” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.