செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

1 minutes read

தமிழ் திரையுலகில் ஏழு தசாப்தங்களாக தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து பாரம்பரியமிக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக ஜொலிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

72 ஆவது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை முன்னிறுத்தும் படைப்பு மற்றும் சிறந்த நடிப்பு சிறப்பு விருது ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்நிறுவனம் தயாரித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை வென்ற படக்குழுவை சார்ந்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் நட்சத்திர நடிகர் தனுஷிற்கு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தங்களது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கும் என உறுதி அளித்திருக்கிறது.

ஆர். எம். வீரப்பன்- டி .ஜி .தியாகராஜன்- அர்ஜுன் தியாகராஜன் + செந்தில் தியாகராஜன் என மூன்று தலைமுறைகளை சார்ந்த தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் ‘கல்யாண பரிசு’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘மூன்றாம் பிறை’, ‘விஸ்வாசம்’, ‘கேப்டன் மில்லர்’ என ஏராளமான தேசிய விருதுக்கான படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

இதன் காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், அதன் தயாரிப்பாளர்களான டிஜி தியாகராஜன்- அர்ஜுன்+ செந்தில் ஆகியோர்களுக்கு திரையுலகினர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே 72 ஆவது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமாவிற்கு அமரன் (3) கேப்டன் மில்லர் (2) மகாராஜா (2), ராயன் (1) மெய்யழகன் (1) ஆகிய திரைப்படங்களுக்காக ஒன்பது விருதுகளும், ஃப்ளு எனும் திரைப்படம் அல்லாத படைப்பிற்கு ஒரு விருதும் என பத்து விருதுகள் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.