செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

1 minutes read

மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய அளவிலான பிரபல நடிகருமான துல்கர் சல்மான் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தில் இடம் பிடித்த ‘வானே வானே’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் ரவி நீலகுடிட்டீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்ரீ ஸ்ரீ ‘ திரைப்படத்தில் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, தீக்ஷித் ஷெட்டி, ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன், சச்சின் கடேக்கர், ராவ் ரமேஷ் ,சங்கீதா நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார்.

விரைவில் இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெற்ற ‘வானே வானே விழியாலே நிலவை வீசாதே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கே. ஆர். தரன் எழுத, பின்னணி பாடகர் நகுல் அபயங்கர் பாடியிருக்கிறார். இந்த பாடலும்… பாடலின் வரிகளும் … மெல்லிசை கலந்த மெட்டும்… இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

மேலும் இந்தப் பாடலுக்கான லிரிக்கல் விடியோவில் துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான ஸ்கிரீன் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.