செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் மிதுன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

நடிகர் மிதுன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

1 minutes read

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் 2021 ஆம் ஆண்டு பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமான நடிகர் மிதுன் மாணிக்கம் – சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு,’ ஃபேமிலி பாய்’ என பெயரிடப்பட்டு, அதற்கான அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மிதுன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தில் மிதுன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுக்கிரகா எஸ். நம்பியார், நிகிலா ஷங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜே. பி. நிர்மல் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிச்சர்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதனை அறிமுகப்படுத்தும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகம் என்பதால் இதற்கான அறிமுகத்தை காணொளி வழியாக வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தைக் கவர படக்குழுவினர் முயற்சித்துள்ளனர்.

அதிலும் ஹீரோவாக அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிப்பதால் மிதுன் மாணிக்கம் தன்னைத்தானே ‘காணவில்லை’ என விளம்பரப்படுத்தி இருப்பது ஒரு பிரிவு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த விளம்பரப்படுத்தும் காணொளியில் கதையின் நாயகியையும் இணைத்து இருந்தால் அறிமுக காணொளிக்கான டிஜிட்டல் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.