செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் பிரஜின் நடிக்கும் ‘ஆலி’

நடிகர் பிரஜின் நடிக்கும் ‘ஆலி’

1 minutes read

தமிழ் சினிமாவின் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடி வரும் நடிகர் பிரஜின் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆலி’ திரைப்படம்-  மதங்களைக் கடந்த காதல் கதையாக உருவாகி உள்ளது என்றும், இத்திரைப்படம் எதிர்வரும் 14ஆம் திகதி தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் டொக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆலி ‘ திரைப்படத்தில் பிரஜின், டொக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டொக்டர் ரஞ்சித் குமார், சௌரவ் ஷியாம், ஆத்யா பிரசாத், மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி, சுரேஷ் திருவல்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரினாஸ் நாசர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராமவர்மா தம்புரான்-  சுரேஷ்- ரத்தீஷ் ராய் – ஆர். ஆர். பிரதர்ஸ்- ஸ்ரத்தா பார்வதி- ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ஹர் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை எஸ் எப் சி ஆட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தமிழக மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வசிக்கும் வெவ்வேறு மதங்களையும் , சாதிகளையும் சார்ந்த ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். அனைத்து தடைகளையும் கடந்து இந்த காதலர்களின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் பரபரப்பான கதை” என்றார்.‌

புதிய படைப்பாளிகள்… அதிலும் பெண் படைப்பாளிகளின் பார்வையில் காதலும், காதலின் வலியும் பேசப்பட்டிருப்பதால்… ‘ஆலி’ படத்திற்கு குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.