செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை | எச்சரிக்கை

எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை | எச்சரிக்கை

0 minutes read

தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன இது குறித்து குறிப்பிடுகையில்,

இலங்கையின் ஆண்டு மழைவீழ்ச்சியில் சுமார் 30 சதவீதம் இந்த இரண்டு மாதங்களில் பொதுவாகப் பெய்யும் என்றும், வழக்கத்தை விட கனமழையால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.

டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோவின் தாக்கங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமன்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.