செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மனு தாக்கல்

ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மனு தாக்கல்

0 minutes read

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரர், ஏனைய வழக்குகள் தொடர்பில் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படும் போது அவரது துறவறக் காவி உடையில் முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்யக் கோரி  உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அளித்த 09 மாத சிறைத்தண்டனையை மேல் நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, ஞானசார தேரர் சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

துறவறக் காவி உடை அகற்றப்பட்டதற்கு எதிராகப் பௌத்த அமைப்புக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.