சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பட மாளிகையில் வெளியான நான்கு நாட்களில் இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனையை படைத்து வருவதாக திரையுலகினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லாமல்.. ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான முதல் காட்சியிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்தையும், வரவேற்பையும் பெற்று வசூலில் சாதனையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
முதல் பாதி கொமடியாகவும், இரண்டாம் பாதியில் எக்சன் என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் அனைத்து ரசிகர்களையும் வசீகரித்திருக்கிறது. இதன் காரணமாக இதன் வசூல் விறுவிறுப்பாக முன்னேறி வருகிறது.
இந்தத் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்திய மதிப்பில் 430 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருப்பதாக திரையுலாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாயை கடந்து வசூலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் இத்திரைப்படம் எளிதாக ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வசூலை கடந்து, புதிய சாதனையை படைக்கும் என அவதானிக்கப்படுகிறது.