இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ரயில் பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நியூபோர்ட் பகுதியிலுள்ள ட்ரெகேர் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குவென்ட் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
காயமடைந்த மாணவர்களின் நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு தெற்கு வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், வேல்ஸ் அவசர நோயாளர் அம்பூலன்ஸ் பிரிவினரும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியூடான வீதி மூடப்பட்டு, போக்குவரத்து மாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
இவ்விபத்து காரணமாக நியூபோர்ட் மற்றும் ஹெரிஃபோர்ட் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான ரயில் சேவைகள் இரு திசைகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், காலை 11 மணி வரை ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என வேல்ஸ் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
