செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஸ்பெயினின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: கடைகள் சூறையாடப்பட்டன; 100 பேர் கைது!

ஸ்பெயினின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: கடைகள் சூறையாடப்பட்டன; 100 பேர் கைது!

1 minutes read

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அரசாங்கத்துக்கு எதிராக நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 25 வீதமானோர் சிறுவர்கள் என கேட்டலோனியா பிராந்தியத்தின் உள்துறை அமைச்சர் நூரியா பார்லோன் தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பிளாசா டி கேட்டலுன்யா பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுமாறு சமூக ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்ட அழைப்பினைத் தொடர்ந்தே மக்கள் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், 14 வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன.

கறுப்பு நிற உடையணிந்து முகத்தை மூடியிருந்த சிலர் வர்த்தக நிலையங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதன்போது கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் வர்த்தக நிலையங்களின் கதவுகள் இழுத்து மூடப்பட்டமையினால், சிலர் உள்ளே சிக்குண்ட காட்சிகளும் பதிவாகியுள்ளன.

நகரில் இவ்வாறான வன்முறைகளையும் சேதங்களையும் ஏற்படுத்திய எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என பார்சிலோனா மேயர் ஜாவ்மே கொல்போனி திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.