தமிழில், ‘வல்லமை தாராயோ’, ‘கே.டி.என்கிற கருப்புதுரை’, இந்தியில் ‘காளிதர் லாபதா’ உள்பட சில படங்களை இயக்கி யிருக்கும் மதுமிதா, இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் இப்போது. அவர் இயக்கி இருக்கும் ‘லவ் ஆல்வேஸ்’ என்ற வெப் தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அடுத்து அவர் இயக்கி இருக்கும் ‘ஜான் டோ’ திரைப்படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது. புரமோஷனில் பிசியாக இருந்த மதுமிதாவிடம் பேசினோம்.
அந்த மாதிரி ஒரு 60 வயது ஜோடி, 20 வயசானவங்களா மாறிடறாங்க, அப்ப என்ன மாதிரியான மேஜிக் நடக்குதுங்கறதுதான் ‘லவ் ஆல்வேஸ்’ வெப் தொடரோட கான்செப்ட். அதனாலதான் இதை மேஜிக்கல் ரொமான்டிக் காமெடின்னு சொல்லியிருக்கோம். கொஞ்சம் புதுசா இருக்கும். இந்த தொடருக்கு வர்ற விமர்சனங்கள் பாசிட்டிவா இருக்கு. இது கொரியால ஹிட்டான ‘ஹியர் வி கோ அகைன்’ அப்படிங்கற வெப் டூன் பாதிப்புல உருவாக்குன கதை இது. மொத்தம் 8 எபிசோட். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இந்திய மொழிகள்ல வெளியாகி இருக்கு.
போலீஸ்னா, வழக்கமான போலீஸ் கேரக்டரா இருக்காது. ஹீரோயிசம் இல்லாத போலீஸ் அதிகாரி. சஞ்சனா நடராஜனும் போலீஸ் அதிகாரியா வர்றாங்க. அவங்களும் வழக்கமான போலீஸா இருக்கமாட்டாங்க. அப்புறம் சிருஷ்டி, ஜாரா… இன்னும் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. இது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்தான். ஜாரா ஒரு 17 வயது டீன்- ஏஜ் பெண்ணா வர்றாங்க. எல்லாருமே அவங்கவங்க கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க.
நிறைய த்ரில்லர் படங்கள் வருது… அதுல இருந்து இது எப்படி வித்தியாசப்படுது?
நான் சரியான மகனா, மகளா? சரியான மனைவியா?’ன்னு பொதுவா எல்லாருக்குள்ளயும் ஒரு கேள்வி இருக்கும்ல. அந்த கேள்விதான் இந்தப் படம். ‘பாகுபலி’யை தயாரிச்ச அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிச்சிருக்காங்க. கண்டிப்பா இந்தப் படம் புது அனுபவத்தை தருங்கறது என் நம்பிக்கை.
‘ஜான் டோ’ -ன்னா என்ன?