2025 ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்களிப்பு எல்லையை ரூ. 1.2 மில்லியனிலிருந்து ரூ. 1.8 மில்லியனாக அதிகரித்தது. தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்கு ரூ. 3,500 இல் இருந்து ரூ. 20,500 வரையிலான மாதாந்த வரி நிவாரணத்தை வழங்கியது.
வரிசெலுத்துநர்களுக்கு மேலும் நிவாரணத்தை வழங்குவதற்கான தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தை மேலும் அதிகரிப்பதற்கும் வரிவிதிக்கத்தக்க வருமான வரம்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் தனிப்பட்ட வருமான வரிக் கட்டமைப்பை திருத்துவதற்கும் நாம் முன்மொழிகின்றோம்.
மாதத்திற்கு ரூ. 100,000 ஆக இருந்த வரி விலக்கு வரம்பை, ரூ. 150,000 ஆக எங்களால் உயர்த்த முடிந்தது. இங்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இதனை மேலும் ரூ. 162,500 ஆக உயர்த்தும். அதன்படி, மாதச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ரூ. 162,500 வரை பெறும் ஒருவர் தனது சம்பளத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை.
6% வரி விகிதங்கள் ஏற்புடையதாகின்ற வரி வரம்புகள் மாதத்திற்கு 70,833 ஆகக் காணப்பட்ட அதேவேளையில், அதன் பின்னர் வரி மட்டம் ரூ. 41,667 ரூபாவிலிருந்து மாதத்திற்கு 50,000 ரூபாவாக விரிவுபடுத்தப்படும். 6% விகிதத்திற்குப் பிறகு, 18% என்பதற்குப் பதிலாக 12% விகிதத்தைப் பயன்படுத்தி, வரி விகிதங்கள் 6%, 12%, 18%, 24%, 30% மற்றும் 36% என சரிசெய்யப்படும்.
இத் திருத்தங்கள் ரூ. 358,000 இலிருந்து ரூ.433,000 வரை அதிகூடிய ஏற்புடையதாகின்ற மாதாந்த வருமான அடிப்படை அளவை அதிகரிக்கின்ற அதேவேளை தனிப்பட்ட வரிசெலுத்துநர் ஒருவருக்கு ரூ. 750 தொடக்கம் ரூ.15,750 வரையிலான மேலதிக மாதாந்த வரி நிவாரணத்தை வழங்கும்.
அதற்கமைய, 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வரி மறுசீரமைப்புக்களினதும் 2027 இற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்கங்களினதும் ஒன்றிணைந்த தாக்கத்தின் மூலம் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் மொத்த மாதாந்த வரி நிவாரணம் தனிப்பட்ட வரிசெலுத்துநர் ஒருவருக்கு ரூ. 4,250 இலிருந்து ரூ. 36,250 வரையாக உயர்வடைகின்றது.