நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘லவ் பைட் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் பைட்’ திரைப்படத்தில் சந்தானம், அபர்ணா தாஸ், ஆனந்தராஜ், வி டி வி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், முத்துக்குமார், நிரோஷா, ‘ஆதித்யா’ கதிர், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ‘கல்கி’ ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாக்ஸ்ன் இசையமைத்திருக்கிறார். கொமடி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம் – கல்பாத்தி எஸ். கணேஷ்- கல்பாத்தி எஸ். சுரேஷ் -ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கதையின் நாயகனான சந்தானத்தின் அதிரடியான எக்சன் அவதார போஸ்டர் – படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.