செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம் நாள் ஆட்டம் நிறுத்தம்

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம் நாள் ஆட்டம் நிறுத்தம்

1 minutes read

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் தனஞ்சய டி சில்வாவும் அணித் தலைவர் குசல் மெண்டிஸும் சதங்கள் குவித்து இலங்கை அணியைப் பலப்படுத்திய போதிலும் நான்காம் நாள் ஆட்டத்தில் அதன் கடைசி 6 விக்கெட்கள் 42 ஓட்டங்களுக்கு சரிந்தன.

தீவுகள் ஆராயுங்கள்

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தனஞ்சய டி சில்வா 167 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 117 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆனால், நான்காம் நாள் ஆட்டம் தொடர்ந்தபோது தனஞ்சய டி சில்வா அதே எண்ணிக்கையிலும் குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 சதங்களையும் ஒரு அரைச் சதத்தையும் குவித்த சொனால் தினூஷ இந்தப் போட்டியில் 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

மிலன் ரட்நாயக்க 12 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அறிமுக வீரர் சக்கிப் கான் 130 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 434 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக பிற்பகல் 1.25 மணிக்கு ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.