செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன்தாரா, திரிஷா, அனுஷ்காவுக்கு 30 வயதை தாண்டிய பிறகும் படவாய்ப்புகள்

நயன்தாரா, திரிஷா, அனுஷ்காவுக்கு 30 வயதை தாண்டிய பிறகும் படவாய்ப்புகள்

1 minutes read

நயன்தாரா, திரிஷா, அனுஷ்காவுக்கு 30 வயதை தாண்டிய பிறகும் படவாய்ப்புகள் குவிகின்றன. இளம் கதாநாயகிகள் போட்டிக்கு மத்தியில் 10 வருடங்களுக்கு பிறகும் மூன்றுபேரும் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கதாநாயகிகளுக்கு 30 வயது ஆனதும் படங்கள் குறைந்து, அம்மா, அண்ணி, அக்கா கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கி விடுவார்கள். சிலர் திருமணம் செய்து சினிமாவை விட்டும் விலகி விடுவர். இந்த பார்முலாவை மீறி நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோர் தொடர்ந்து கதாநாயகிகளாக நடித்து இளம் கதாநாயகிகளுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

நயன்தாரா

நயன்தாராவுக்கு 32 வயது ஆகிறது. 2005-ல் ‘ஐயா’ படத்தில் அறிமுகமான அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வரை முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். நானும் ரவுடிதான் படத்தில் காதுகேளாத பெண்ணாகவும் தெலுங்கில் வந்த ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாகவும் வந்து நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பிறகு கதாநாயகர்களுக்கு இணையாக உயர்ந்தார்.

பெரிய நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நயன்தாரா நடிக்க தொடங்கி உள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவரது படங்கள் வசூல் குவிக்கின்றன. சமீபத்தில் வெளியான அறம் படத்தில் கலெக்டராக வந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்தது. தொடர்ந்து அவர் நடித்து வரும் இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம் ஆகிய படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையசம்சம் கொண்டவை. சிவகார்த்திகேயனுடன் நடித்த வேலைக்காரன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோர் ஜோடியாகவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி 12 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவருக்கு இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி குண்டுப் பெண்ணாக நடித்ததற்காக ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்து இருக்கிறது.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உடலை வருத்தி மெனக்கெடுகிறார். அவர் நடித்துள்ள பாக்மதி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. வயதை பொருட்படுத்தாமல் இயக்குனர்கள் கதைகளுடன் அவரை மொய்க்கிறார்கள்.

திரிஷா

திரிஷாவுக்கு 34 வயது ஆகிறது. இவர் 2002-ல் மவுனம் பேசியதே படத்தில் இருந்து 15 வருடங்களாக கதாநாயகியாகவே நடித்துக்கொண்டு இருக்கிறார். இவ்வளவு காலம் கதாநாயகியாக நீடிப்பதை சக நடிகைகள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் கதாநாயகர்களுடன் காதல் காட்சிகளில் நடிப்பதை அவர் விரும்பவில்லை.

தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேடுகிறார். அவர் நடித்துக்கொண்டு இருக்கும் மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, 1818 மற்றும் 96 ஆகிய படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள். இந்த படங்கள் தனது மார்க்கெட்டை இன்னும் உயர்த்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.