செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ரவை, உருளைக்கிழங்கு சேர்த்து மாலை நேர ஸ்நாக்ஸ்!

ரவை, உருளைக்கிழங்கு சேர்த்து மாலை நேர ஸ்நாக்ஸ்!

1 minutes read

மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு தினமும் என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை மற்றும் ஒரு உருளைக்கிழங்கு இருந்தால் போதும். அவற்றைக் கொண்டு சுவையான ரவை உருளைக்கிழங்கு பால்ஸ் செய்து கொடுக்கலாம்.

வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக, இதை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1 (வேகவைத்தது)
ரவை – 1/2 கப்
தண்ணீர் – 1 கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சோள மாவு – 1/4 கப்
பிரெட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3–4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்னர் குக்கரில் உள்ள அழுத்தம் முழுமையாக வெளியேறியதும் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். அதனுடன் சீரகம், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.

பின்னர் மஞ்சள் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டிகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கிளறவும். ரவை நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து, கலவையை சிறிது நேரம் ஆற விடவும்.

ரவைக் கலவை கை பொறுக்கும் அளவுக்கு ஆறியதும், அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவை எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மெல்லிய கலவையாகக் கரைத்துக் கொள்ளவும்.

உருட்டி வைத்துள்ள உருண்டைகளை முதலில் சோள மாவுக் கலவையில் நனைத்து, பின்னர் பிரெட் தூளில் நன்றாகப் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் உருண்டைகளைப் போட்டு, மிதமான தீயில் அனைத்து பக்கங்களும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொரித்தெடுக்கவும்.

அவ்வளவுதான்! சுவையான, மொறுமொறுப்பான ரவை உருளைக்கிழங்கு பால்ஸ் தயார்.

இதை மாலை நேரத்தில் தேநீர் அல்லது உங்களுக்கு பிடித்த சாஸுடன் பரிமாறலாம். குறைந்த பொருட்களிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய இந்த ஸ்நாக்ஸ், வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது நிச்சயம் முயற்சி செய்து பார்க்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.