“நாம் வேறொன்றுக்கு மிகத் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது… சம்பந்தமே இல்லாமல் நமக்கு வேறொன்று நடக்கும். அது தான் வாழ்க்கை.” இது ‘மேரி ஒர்த்’ காமிக் கதையை எழுதிய ஏலன் கூறியது. ஜெயலலிதா அப்போது எதற்காக திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. அப்போது அவர் எதிர்பாராதது எல்லாம் நடந்தது. அவர் உதறித் தள்ளிய பா.ஜ.க தலைமையில் மத்தியில் ஆட்சி, அதில் சர்வ அதிகாரங்களுடன் தி.மு.க. என அவர் எதிர்பாராதது அல்லது விரும்பாததெல்லாம் நடந்து கொண்டிருக்க… அல்லது இதை எப்படி எதிர் கொள்வது என்று திட்டமிட்டுக் கொண்டிருக்க… ஏலன் கூறியது போலவே, ஜெயலலிதாவுக்கு வேறொன்று நடந்தது. ஆம், மில்லினியம் ஆண்டின் முதல் மாதமே, அதாவது ஜனவரி 12, 2000 அவருக்கு சந்தோஷம் தருவதாக இல்லை.
அவர் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகாவுக்கு ஒரு ஊழல் வழக்கில் ஏழு ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்ளுக்குள் உடைந்துதான் போனார். ஏனென்றால், அடுத்த நாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் டான்சி வழக்கில் தீர்ப்பு. அதில் ஜெயலலிதா தான் முதல் குற்றவாளி. தீர்ப்புக்காக பதைபதைப்புடன் காத்திருந்தார்… அவர் பதைபதைப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை… சில தினங்களுக்கு முன்பு தான் அவரது ஆஸ்தான ஜோதிடர்கள், அவருக்கு இப்போது நேரம் சரியில்லை… நட்சத்திரங்களின் நகர்வு சரியில்லை என்று கூறி இருந்தார்கள். இதற்கு முன்பே கணித ஜோதிடத்தின் படி Jayalalitha என்ற தன் பெயரை Jayalalithaa என்று மாற்றி இருந்தார். ஜோதிடர்கள் சொன்னபடி எல்லாவற்றையும் பச்சை வண்ணத்துக்கும் மாற்றி இருந்தார். இருந்தும் இப்போது ஜோதிடர்கள் கஷ்ட காலம் என்கிறார்கள்… ஆனால், அவர்களே சில பரிகாரங்களும் சொல்லி இருந்தார்கள். அனைத்தையும் ஜெயலலிதா சிரமேற்கொண்டு செய்தார்.
விடிந்தது. ஜனவரி 13… அது அந்த நாளுக்கான புதுவிடியலாக மட்டும் இல்லை. ஜெயலலிதாவுக்கும் மன இறுக்கத்திலிருந்து ஒரு விடிவாகத்தான் இருந்தது. ஆம், டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதாவை நீதிபதி எஸ். தங்கராஜ் விடுவித்தார். ஜெயலலிதா பெருமூச்சு விட்டார். ‘தர்மம் வென்றது’ என்றார். வெகு நாட்களுக்குப் பின் உண்மையாக இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தார். ஆனால், அந்த புன்னகை வெகுநாட்கள் நீடிக்கவில்லை.
‘கொளுத்தப்பட்ட மாணவிகள்’
ஆம். வரிசைகட்டி நின்ற வழக்குகளில் ஒன்றான கொடைக்கானல் ‘பிளசண்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. நிலக்கரி இறக்குமதி வழக்கிலிருந்து, ஜெயாவை விடுவித்த நீதிபதி வி. ராதாகிருஷ்ணன் தான், இந்த வழக்கையும் விசாரித்தார். ஜெயலலிதா கொஞ்சம் நம்பிக்கையாகத் தான் இருந்தார். ஆனால், இந்த முறை அவர் நம்பிக்கை உருப்பெறவில்லை. ஆம், ஜெயலலிதாவுக்கு இந்த வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ராதா கிருஷ்ணன் தீர்ப்பளித்தார். அவருக்கு மட்டுமல்ல… அவருடன் சேர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பாண்டே, பிளசண்ட் ஸ்டே-வின் உரிமையாளர்கள் ராகேஷ் மிட்டல், சண்முகத்துக்கும் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பு வந்ததும் ஜெயலலிதா நிலைகுலைந்து போனார்.
இதனால்தானோ என்னவோ, பின்னொரு நாள் கரண் தபாருக்கு அளித்த பேட்டியில் கோபமாக,“நான் ஒன்றும் மூடநம்பிக்கை கொண்டவள் இல்லை. எனக்கு ஜோதிடத்தில், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை” என்று சொன்னாரா என்று தெரியவில்லை.
சரி, விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம்… தீர்ப்பு குறித்த செய்தி 4G வேகத்தில் பரவியது. பிப்ரவரி 2, 2000 -ம் ஆண்டு, தமிழகமெங்கும் வன்முறை வெடித்தது… பேருந்துகள் கொளுத்தப்பட்டன… ஒரு கட்டத்தில் வன்முறை எல்லை மீறிச் சென்றது… தருமபுரி மாவட்டத்தில்… ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணித்த பேருந்து தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. உயிருடன் மூன்று மாணவிகள் காயத்ரி, கோகிலவாணி, ஹேமலதா பேருந்துக்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்தனர். தமிழகமே விக்கித்து நின்றது.
இப்போது கட்சி தலைமையிடம் நல்ல பேர் எடுப்பதற்காக, போராட்டம் செய்வதற்கு முன் அனைத்து நிருபர்களுக்கும் தகவல் கொடுக்கிறார்கள் அல்லவா கட்சிக்காரர்கள்… அப்போதும், அதுபோல தான் செய்திருந்தனர். அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் தகவல் கொடுத்தனர்… அவர்கள் முன்னிலையில் தான் பேருந்தை எரித்தனர். அதனால், அனைத்து தொலைக்காட்சி கேமிராக்களிலும் இந்த சம்பவம் பதிவாகி இருந்தது. அவர்களும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினர்.
‘பயம் தான் பயம் கொள்ள வேண்டும்’
அ.தி.மு.க மற்றும் ஜெயலலிதாவின் நிலை இவ்வாறாக இருக்க… உச்ச நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் டான்சி வழக்கு விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்தமுறை அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்… என்ன செய்வதென்று தெரியாமல் ஜெயலலிதா கொஞ்சம் திணறித்தான் போனார். சிலநாட்கள் போயஸ் கார்டனிலிருந்து வெளியே வராமல் இருந்த ஜெயலலிதா… கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் சென்றார்… மனம் உருக வேண்டினார்… பின் அ.தி.மு.கவின் 29-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரை ‘நான் வீழ்ந்து விடவில்லை’ என்பதாக இருந்தது.
அந்த உரை, “நாம் பயம் கொள்வதற்கு ஒன்றும் இல்லை… பயம் தான் பயம் கொள்ளவேண்டும்… என்னை மக்கள் மன்றத்தில் வீழ்த்த திராணியற்ற கருணாநிதி… பொய் வழக்குகள்… சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் என்னை வீழ்த்தப் பார்க்கிறார். எத்தனை கருணாநிதி வந்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது… மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால்… நிச்சயம் கருணாநிதியை கைது செய்வேன்..” என்றார்.
அதுவரை துவண்டிருந்த அ.தி.மு.கவினர் உற்சாகம் கொண்டனர்… தேர்தலுக்குத் தயாராகினர்.
தொடரும்…
நன்றி : ஆனந்த விகடன்
முன்னைய பகுதிகள் :
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-27-10-17-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-28-11-04-17/
http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-29-11-14-17/
http://www.vanakkamlondon.com/httpwww-vanakkamlondon-comfrom-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-30-11-29-17/



