செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அத்துமீறி தென்கொரிய எல்லைக்குள் நுழைந்த வடகொரிய வீரர்

அத்துமீறி தென்கொரிய எல்லைக்குள் நுழைந்த வடகொரிய வீரர்

1 minutes read

கொரிய தீபகற்பத்தில் 1953-ம் ஆண்டு நடந்த போரைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே சமரச உடன்படிக்கை கையெழுத்தானது.

ஆனாலும் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு மக்கள் மட்டுமல்ல, ராணுவ வீரர்களும் தப்பிச்செல்வது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை 3 வடகொரிய வீரர்கள் தென்கொரியாவுக்கு எல்லை தாண்டிச்சென்று விட்டனர். கடைசியாக கடந்த மாதம் 13-ந் தேதி ஒரு வீரர், தென்கொரியாவுக்கு எல்லை தாண்டியபோது, சக வீரர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் சியோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்னும் சிகிச்சை பெறுகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வடகொரியாவில் இருந்து மேலும் ஒரு வீரர் தென்கொரியாவுக்கு அடர்ந்த பனி மூட்டத்துக்கு இடையே நைசாக தாவினார். இதை தென்கொரியாவின் ராணுவ செய்தி தொடர்பாளர் ரோ ஜே செயோன் உறுதி செய்தார்.

எல்லை தாண்டிய வடகொரிய வீரரை தென்கொரியா தனது காவலில் எடுத்துக்கொண்டது. என்ன காரணத்துக்காக அவர் எல்லை தாண்டினார் என்பது பற்றி விசாரிக்கப்படுகிறது.

19 வயதான அவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் எல்லை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தென்கொரியாவுக்கு தாவிய உடன் வடகொரிய வீரர்கள் எல்லையில் குவிந்தனர். உடனே அவர்களை எச்சரிக்கும் விதத்தில் தென்கொரிய வீரர்கள் 20 முறை சுட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.