செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.நா.வில் ஜெருசலேம் விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு

ஐ.நா.வில் ஜெருசலேம் விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு

1 minutes read

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. இதில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜெருசலேம் நகரம் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதிக்க உலகின் சக்தி வாய்ந்த 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் 19-ம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எகிப்து நாட்டின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒருபக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டது.இந்த தீர்மானத்தை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இதேபோல், பாலஸ்தீனம், ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.
இருப்பினும் அமெரிக்கா ‘வீட்டோ’ (வெட்டுரிமை) அதிகாரத்தால் இந்த தீர்மானத்தை நிராகரித்தது.

இதையடுத்து, ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பொதுச்சபையில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த வாக்கெடுப்பில் வாக்களிக்க இருக்கும் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்க மிரட்டல் விடுத்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளின் பெயர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்படும் என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது, ‘அவர்கள் நம்மிடம் இருந்து மில்லியன் மற்றும் பில்லியன் டாலர்கள் வாங்கிக்கொண்டு, பின் நமக்கு எதிராக வாக்களிப்பார்கள். நடைபெறுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். நமக்கு எதிராக அவர்கள் வாக்களிக்கட்டும். நமக்கு கவலை இல்லை. நாம் அதிகமாக சேமிக்கலாம்’, என அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.