சீன ஜனாதிபதியும் அந்நாட்டின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இராணுவத்தினருக்கு சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2018ஆம் ஆண்டிற்கான இராணுப்படைப் பயிற்சிக்கு அணி திரட்டும் விழாவை சீன மத்திய இராணுவ ஆணையம் நேற்று நடத்தியது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஷpச்சின்பிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அனைத்து படைப்பிரிவுகளும் புதிய யுகத்தில் இராணுவத்தை வலுப்படுத்தும் சிந்தனையையும் செயல்படுத்தி, போருக்கான இராணுவப் பயிற்சியை பன்முகங்களிலும் வலுப்படுத்தி, போரில் வெற்றி பெறும் திறனை உயர்த்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த பயிற்சி உத்தரவுக்குப் பின்னர், 2018ஆம் ஆண்டிற்கான அனைத்துப் படைப்பிரிவுகளின் இராணுவப் பயிற்சியும் அதிகாரப்பூர்வமாக நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், கலந்துகொண்ட சீன ஜனாதிபதி பல்வேறு படைப்பிரிவுகளும் ஆயுதக் காவல் படையும் மேற்கொண்டு வருகின்ற வெளிப்புற பயிற்சியையும் காணொளியின் மூலம் பார்வையிட்டதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.