செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்!

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்!

0 minutes read
நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி அறிவிப்பும், அவரது அரசியல் பிரவேசமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் கொடி என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிவித்தார்.
இதன் மூலமாக பொதுமக்கள் ரஜினி மன்றத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்து வருகிறார்கள். இதுவரையில் 50 லட்சம் பேர் இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர்.
இப்படி பலதரப்பட்ட மக்களும் ரஜினி மன்றத்தில் போட்டி போட்டு இணைந்து வரும் நிலையில், ரஜினி பெயரில் போலியான இணையதள முகவரிகளும் வலம் வரத் தொடங்கி உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.