செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சாம்சங் நிறுவன துணைத் தலைவர் விடுதலை | தென் கொரியா

சாம்சங் நிறுவன துணைத் தலைவர் விடுதலை | தென் கொரியா

1 minutes read

தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையின் நெருங்கிய தோழி, சோய் சூன் சில். இவர் அதிபரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெரும்தொகைகளை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அதிபரின் தொடர்பும் சந்தேகிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பார்க் கியூன் ஹே, 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த 2015-ம் ஆண்டு சாம்சங் குழுமத்தின் 2 நிறுவனங்களை ஒன்றிணைத்தபோது, அந்த நடவடிக்கையில் தேசிய ஓய்வூதிய நிதியத்தின் ஆதரவை தருவதற்கு பெருமளவு பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஏ ஜாங் என்பவரை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து, அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது லீ அளித்த வாக்குமூலத்தை இதர அரசு ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்த அரசு அதிகாரிகள் அவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அவருக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் லீ ஏ ஜாங்க்-க்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக லீ ஏ ஜாங் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தண்டனை காலத்தை இரண்டரை ஆண்டுகளாக குறைத்தும், லீ ஏ ஜாங்-யை விடுதலை செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹை மற்றும் அவரது நெருங்கிய தோழி, சோய் சூன் சில் ஆகியோரைதான் முக்கிய குற்றவாளிகளாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ஏற்கனவே கீழ்கோர்ட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம்சங் அதிகாரிகள் 4 பேரை விடுதலை செய்தும், இருவரின் தண்டனை காலத்தை பாதியாக குறைத்தும் தீர்ப்பளித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.