செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்கா கூட்டுப் படை தாக்குதல் | சிரியா

அமெரிக்கா கூட்டுப் படை தாக்குதல் | சிரியா

1 minutes read
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 வீரர்கள் உயிரிழந்தனர்.
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், இன்று குஷாம் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டுப் படையின் முகாம்களை குறிவைத்து சுமார் 500 அரசுக் ஆதரவு படையினர் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அமெரிக்கா கூட்டுப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 பேர் பலியானதாக அமெரிக்கா கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வீரர்கள் மட்டுமே மரணமடைந்துள்ளதாக சிரியா அரசு ஆதரவு படையினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.