செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமைதிப்படை தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண் லெப்டினன்ட் கர்னல் | ஐ.நா.

அமைதிப்படை தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண் லெப்டினன்ட் கர்னல் | ஐ.நா.

1 minutes read

உலகில் போர் பதற்றம் அதிகம் உள்ள பகுதிகளிலும், கலவரங்கள் அதிகம் நிகழக்குடிய பகுதிகளுக்கும் ஐ.நா. அமைதிப்படையினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த அமைதிப்படையில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, அப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளிலும் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில், கலவரம் அதிக அளவில் நிகழக்குடிய சூடானின் தெற்கு பகுதிக்கு சமீபத்தில் ஒரு ஐ.நா. அமைதிப்படை கூழு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்த குழுவின் தலைவராக பிரட்டன் நாட்டை சேர்ந்த பெண் லெப்டினன்ட் கர்னலான கேட்டி ஹிஸ்லோப் பொறுப்பேற்றுள்ளார். ஐ.நா. அமைதிப்படையின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து கேட்டி ஹிஸ்லோப் கூறுகையில், உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கு சரியான இடம் வழங்கப்படுவதில்லை. எப்படியோ எனக்கு ஒரு மரியாதையான இடம் கிடைத்துள்ளது. என்னைப்போன்ற பெண்கள் ராணுவத்தில் இணைவதற்கு நான் ஒரு முன்மாதிரியாக இருப்பேன் என நினைக்கிறேன், என அவர் கூறினார்.
கேட்டி ஹிஸ்லோப்பிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.